மரச்செக்கு நல்லெண்ணெயை வைத்து செய்யப்படும் எண்ணெய் குளியலினால் ஏற்படும் நன்மைகள்.
இரத்த அழுத்தத்தை (BP) சமன் செய்யும், மேலும் மன அழுத்தத்தையும் (Stress) குறைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரியும், எலும்பு மற்றும் தசைகளுக்கு மிருதுவான இயங்கு சக்தியை கொடுக்கும், மேலும் கை மூட்டி, கால் மூட்டி போன்ற இணைப்புகளுக்கு ஒரு வித மிருது தன்மையை கொடுக்கும்.
ஆழ்ந்த நித்திரையை கொடுப்பதோடு, சருமத்திற்கு ஒரு பள பளப்பை கொடுத்து முடியை அடர்த்தியாக வளரச் செய்வதோடு முடி கொட்டுவதையும் தடை செய்து இள நரையையும் போக்க வல்லது.அதிகாலை எழுந்து மரச்செக்கு நல்லெண்ணையில் வாய் கொப்பளித்து வந்தால் நமது உள் உறுப்புகள் என்றும் ஆரோக்கியமாக இருப்பதோடு நோய் நொடி அண்டாமலும் பாதுகாக்கும். மேலும் கண் மற்றும் காதுகளில் சொட்டு மருந்தாக விடும் போது சொல்லில் அடங்கா பயன்களைப் பெறலாம்