சளி இருமல்
தேவைப்படும் பொருட்கள்
கருப்பு மிளகு - 10 பொடித்தது
அகஸ்தியர் மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
பசும்பால் - 100 மி.லி.
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
செய்முறை
மிளகு, மஞ்சள் மற்றும் பால் இவைகளை ஒன்றாக அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்க வைத்து பால் 50 மி.லி. யாக சுண்டியபிறகு வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து அத்துடன் 1/2 டீஸ்பூன் அகஸ்தியர் தேன் கலந்து குடித்து வர சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
எத்தனை முறை குடிக்கலாம்?
காலை, மதியம் மற்றும் இரவு
முக அழகு
முக அழகிற்கு தேன் எவ்வாறு பயன்படுகிறது?
அகஸ்தியர் சுத்தமான தேன் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதை முகத்தில் பூசும்போது தோல் சுருக்கம் நீங்கி முகம் பொலிவாகும். சுத்தமான தேன் மிகச்சிறந்த கிருமி நாசினி யாகும், மேலும் இதிலுள்ள எண்ணெய்ப் பசை சருமத்திற்கு ஒருவித பளபளப்பை கொடுக்கும்.
முகப்பூச்சு குறிப்பு 1
தேன் மற்றும் எலுமிச்சை முகப்பூச்சு
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம்
- அகஸ்தியர் தேன்
செய்முறை
1 டேபிள் ஸ்பூன் அகஸ்தியர் தேனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து மேற்பூச்சாக முகத்தில் பூசிவர தழும்புகள் மறைவதோடு மிகவும் மினுமினுப்பாக மாறி விடும்.
முகப்பூச்சு குறிப்பு 2
தேன் மற்றும் கருவாப்பட்டை முகப்பூச்சு
தேவையான பொருட்கள்
- அகஸ்தியர் முதல்தர சிலோன் கருவாப் பட்டை 1 டேபிள் ஸ்பூன் பொடித்தது
- அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இந்த இரண்டையும் ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து அதை கொஞ்சம் இளஞ்சூடான தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் இன்றியும் அழகாக இருக்கும்.
ஸ்கின் அலர்ஜி இருப்பவர்கள் இந்த முறையை தவிர்ப்பது நல்லது.
முகப்பூச்சு குறிப்பு 3
தேன் மற்றும் ஓட்ஸ் முகப்பூச்சு
தேவையான பொருட்கள்
- அகஸ்தியர் ஹிமாலயன் தேன்
- சமைக்காத ஓட்ஸ் கொஞ்சம்
செய்முறை
சமைக்காத ஓட்ஸை நன்றாக அரைத்து சலித்து பைன் பவுடராக்கி பின் அதில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளஞ்சூடான தண்ணீரில் கழுவி வர முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.
அலர்ஜிக்கு
தேவையான பொருட்கள்
- அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சம்பழம் - 1
- துளசி இலை - 5
செய்முறை
ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அகஸ்தியர் தேனை கலந்து அதில் 5 துளசி இலைகளைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து பிறகு குடிக்கவும் இவ்வாறு காலை மாலை குடித்துவர ரத்தம் சுத்தமாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடி அலர்ஜி களில் மாற்றம் தெரியும்.
விரதம் இருப்பவர்களுக்கு
தேவையான பொருட்கள்
- அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 1 டேபிள்ஸ்பூன்
- துளசி இலை - 10
செய்முறை
500 ml தண்ணீரில் 10 துளசியை ஊறப்போட்டு அதில் இந்த தேனை கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் குறையும் மன அழுத்தம் குறையும் குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று உபாதைகள் மாறும் ஆத்திரட்டிஸ் எனப்படும் கைகால் வலி கட்டுப்படும் இனிப்பு நீர் என்னும் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.
இருதயத்திற்கு
தேவையான பொருட்கள்
அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 3 டேபிள்ஸ்பூன்
பேரிச்சம்பழம் - 2
தாமரைப்பூவின் இதழ்கள் - 5
செய்முறை
பேரீச்சம் பழத்தின் விதையை நீக்கிவிட்டு இரண்டு பழங்களை தேனில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் புதிதாக பறித்த தாமரை பூவின் இதழ்களை அந்த பேரீச்சம்பழத்துடன் சேர்க்கவும் பிறகு இவைகளை எடுத்து வெந்நீரில் போட்டு அரைத்து அதனுடன் இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து குடிக்கவும்.
இதனுடைய பயன்கள் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, குடித்து வரும்பொழுது உடல்நிலை சமச்சீராக இருக்கும் இருதய செயல்பாடு மிகவும் அழகாக இருக்கும், சீராகவும் இருக்கும்.
உடல் பருமனுக்கு
தேவைப்படும் பொருட்கள்
- அகஸ்தியர் ஹிமாலயன் தேன்
- காய்கறிகள்
- இஞ்சி - சிறிதளவு
செய்முறை
அகஸ்தியர் ஹிமாலயன் தினமும் இருவேளை உண்டு வர உடல் எடையில் மாற்றம் தெரியும் இரவு தூங்கும் முன் அவசியமின்றி குடித்து வர உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும் இரவு உணவிற்கு காய்கறிகளையும் பழங்களையும் உண்டு வரவேண்டும்
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து குடித்துவர தேவையில்லாத கொழுப்புகள் கரையும் இதை ஒரு நாளைக்கு 4 வேளை குடிக்க வேண்டும் மிகவும் சிறந்த அளவில் இதன் வித்தியாசத்தை காணலாம்.
சமைக்காத உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
இதை குடித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் தேனை அன்றாடம் உணவில் கலந்து வர இனிப்பு நீரின் அளவை சமன் படுவதோடு அளவுக்கு அதிகமான உடல் எடை குறைய ஆரம்பிக்கும் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் சத்து சராசரி அளவுக்கு வரும் கெட்ட கொழுப்பு மிகவும் விரைவாக கரையும் நல்ல கொழுப்பு சம அளவில் இருக்கும்.